சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் முகவர்கள் 5 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த வேட்பாளர்கள், அரசியல் கட்சி முகவர்கள், அரசு அலுவலர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அதில் கம்பனூரை சேர்ந்த ஒருவருக்கும், திருப்பத்தூர் நகர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், மல்லாக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், எஸ்.புதூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், தாலுகா அலுவலகத்தில் பணிபுரிய கூடிய ஊழியர் ஒருவருக்கும் என 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அவர்கள் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.