மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவு வெளிவருவதற்கு முன்பாகவே தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பதாக அமெரிக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக அமெரிக்காவில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான பணிகள் தீவிரமாக உள்ளது. அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளன. மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவதற்கு முன்பாகவே தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்போம் என்று அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் உருவாக்கும் தடுப்பூசிக்கு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே அங்கீகாரம் அளிக்கப்படும் அதாவது நவம்பர் மூன்றாம் தேதிக்கு முன்னதாகவே அங்கீகாரம் வழங்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் தலைவர் ஸ்டீபன் ஹன் இதுகுறித்து கூறியுள்ளது யாதெனில், தடுப்பூசி உற்பத்தி செய்த நிறுவனம் மூன்றாம் கட்ட பரிசோதனையின் முடிவுக்கு முன்னதாகவே அங்கீகாரம் கோரி விண்ணப்பித்தால் அவர்கள் வழக்கமான நடைமுறையை பின்பற்றாமல் அந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்போம் என்று கூறியுள்ளார். ஆபத்தை விட பயன்கள் அதிகமாக இருப்பதால் அங்கீகாரம் கொடுப்பது சாத்தியமான ஒன்றாகும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த முடிவானது அறிவியல் மற்றும் மருத்துவம் அடிப்படையிலானதாகவே இருக்குமென்றும், இது ஜனாதிபதியைத் திருப்திப்படுத்துவதற்காக ஏற்கப்பட்ட முடிவு அல்ல என்றும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.