பிரிட்டனில் கடந்த வருடம் சடலமாக மீட்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை தொடர்பில் பல மாதங்களாக எந்த வித தகவலும் கிடைக்காமல் உள்ளது.
பிரிட்டனில் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் 20-ம் தேதியன்று பிராட்போர்ட் என்ற பகுதியில் இருக்கும் கழிவு மறுசுழற்சி நிலையத்தில் பச்சிளம் பெண் குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து உடனடியாக நிலையத்தின் பணியாளர்கள் அவசர உதவிக்குழுவினரை அழைத்துள்ளனர்.
குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டதால், பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதிலும் குழந்தை எதனால் இறந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிகாரிகள் அந்த குழந்தையின் தாயை கண்டுபிடிப்பதற்கான முயற்சியை தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். மேலும் இது தொடர்பில் பொதுமக்களிடமும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
அதுவும் பலனளிக்காமல் போன நிலையில், சுமார் 9 மாதங்கள் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியும், குழந்தை தொடர்பில் எந்தவித தகவலும் தெரியாததால் குழந்தையின் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் காவல் துறையினர், இந்த விசாரணையை முடிப்பதற்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் காவல் துறையினர் தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குழந்தையின் தாய் பிராட்போர்ட் பகுதியை சேர்ந்தவர் என்று கருதுகின்றனர். எனினும் தற்போது வரை காவல் துறையினரால் அந்த குழந்தையின் தாயை கண்டுபிடிக்க முடியவில்லை.