ஓட்டலில் உணவு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி சாலையில் உள்ள ஒரு அசைவ உணவகத்தில் நேற்று முன்தினம் (கடந்த 8ஆம் தேதி) சிறுமி, சிறுவர்கள் உட்பட 12 பேர் பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து 12 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.. அதனைத் தொடர்ந்து 3 பேர் தனியார் மருத்துவமனையிலும், மற்ற 9 பேர் ஆரணி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்..
இதற்கிடையே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.. இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுமி லக்ஷனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.. 12 பேரில் ஒரு சிறுமி உயிரிழந்த நிலையில், ஆனந்தன், பிரியதர்ஷினி, ஜெகன் ஆகிய 3 பேருக்கு மருத்துவமனையில், அபாயகட்டத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.