கார்த்திக் நடித்த சுல்தான் திரைப்படத்தில் வரும் வில்லன்களில் ஒருவராக நடித்தவர் பிரபு. இவர்தான் வறுமையில் இருப்பதாக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது சுல்தான் படத்திற்கு பிறகு எனக்கு பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. வேலை தேடி சென்றாலும் உருவத்தை காரணம் காட்டி வேலை கொடுக்க மறுக்கிறார்கள். வாடகைக்கு வீடு கூட கிடைக்கவில்லை. யாராவது எனக்கு வாய்ப்பு அளித்த உதவுங்கள் என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
https://www.youtube.com/watch?v=cCpfm4exUgM