பிரபல நடிகர் மொட்டை ராஜேந்திரன் 2003 ஆவது ஆண்டில் வெளியான பிதாமகன் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னர் வரை, தென்னிந்தியத் திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டில் வெளியான நான் கடவுள் திரைப்படத்தில் ஏற்ற எதிர் நாயகன் வேடத்தின் மூலமாக புகழ்பெற்றார். தற்போது துணை மற்றும் எதிர் வேடங்களில் நடித்து வருகிறார். மொட்டை ராஜேந்திரன் தற்போது பட வாய்ப்புகள் இன்றி தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக அறிமுகமான இவர், நான் கடவுள் படத்தில் வில்லனாக மிரட்டினார். பிறகு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் ஏற்று நடித்ததால் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், திறமையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கலாம் என்றும் புலம்பி வருகிறாராம்.