மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவிளந்தூர் பரிமள ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் வருடந்தோறும் துலா உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த துலா உற்சவம் பத்து நாட்கள் நடைபெறும். மயிலாடுதுறையில் உள்ள அனைத்து கோவில்களிலும் இந்த துலா உற்சவம் நடைபெறும்.
காவிரி நதியை மையப்படுத்தி நடக்கும் இந்த உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. காலையில் கொடி மரத்திற்கு பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து கருட கொடியை ஏற்றியுள்ளனர். மேலும் வருகின்ற 15ஆம் தேதி திருக்கல்யாணமும் 16ஆம் தேதி தேர் திருவிழாவும் கடைமுகத் தீர்த்த வாரியும் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்ய காத்துக்கொண்டிருக்கின்றனர்.