“பரியேறும் பெருமாள்” திரைப்படத்தில் நடித்தவரும் நாட்டுப்புற கலைஞருமான தங்கராசுவின் புது வீட்டை இயக்குனர் மாரி செல்வராஜ் திறந்து வைத்தார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனுக்கு அப்பாவாக நடித்து புகழ்பெற்ற தங்கராசுவின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் புதிய வீடு ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளது.
இந்த புதிய வீட்டை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்னு மற்றும் இயக்குனார் மாரி செல்வராஜ் போன்றோர் திறந்து வைத்தனர். இதுபோல நலிந்த கலைஞர்களுக்கு உதவ வேண்டும் என்று இயக்குனர் மாரி செல்வராஜ் கேட்டுக் கொண்டார்.