Categories
ஆன்மிகம் மதுரை மாவட்ட செய்திகள்

பரிவாரங்களுடன் வீதியில் உலா வந்த கள்ளழகர்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

மதுரை மாவட்டத்தில் கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு விஜயதசமி நாளான நேற்று மாலை வேளையில் சிறப்பு விழா நடைபெற்றது. இதில் கள்ளழகர் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். இதனை அடுத்து மேளதாளம் முழங்க வர்ணக் கொடையுடன், தீவெட்டி பிடித்தபடி, பரிவாரங்களுடன் பெருமாள் புறப்பாடாகி ஆடி வீதியில் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் தெற்கு கொடை வாசல் வழியாக சென்ற கள்ளழகர் அம்பு விடும் மண்டபம் முன்பு எழுந்தருளினார்.

மேலும் வன்னி மரத்தடியில் பட்டர்கள் வேத மந்திரங்கள் முழங்க பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் நடைபெற்றது. அதன் பின் பெருமாள் அம்புவிடும் நிகழ்ச்சியும் நடந்தது. இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பின் பரிவாரங்களுடன் சுவாமி வந்த வழியாக திரும்பி சென்று கோவிலின் இருப்பிடத்திற்கு சென்றது. இந்த விழா ஏற்பாடுகளை கோவிலின் கண்காணிப்பாளர், உள்துளை அலுவலர், பணியாளர்கள் என பலர் செய்திருந்தனர்.

Categories

Tech |