மதுரை மாவட்டத்தில் பரிவேட்டை திருவிழாவில் 44 ஆடுகள், 800 சேவல்கள் பழிதீர்த்து கறி விருந்து சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அருகில் திருச்சி நான்கு வழி ரோட்டில் சத்தியப்புரம் பகுதியில் பழமையான முத்துப்பிள்ளை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயில் முன் நிறைய மரங்கள் சூழ்ந்து காணப்படுகின்றன. அதில் இழந்தை மரத்தடியில் இக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிறப்பாக வருடந்தோறும் மகா சிவராத்திரி விழாவை ஒட்டி மூன்றாவது நாள் பரிவேட்டை திருவிழா சிறப்பாக நடைபெறும்.அதில் கறிவிருந்து அன்னதானம் போடப்படுவது வழக்கம்.
அதைப்போல் இந்த வருடத்திற்கான விழா நேற்று நடைபெற்ற போது மருளாடி என்று அழைக்கப்படும் சாமி ஆடும் பெண் ஒருவர் கோவில் பகுதியில் பரப்பி வைத்திருந்த மல்லிகை பூக்களில் நாகப்பாம்பு போல தோற்றமளித்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கொடுப்பார். இந்த விழாவிற்கு வந்த பக்தர்கள் அம்மனுக்கு காணிக்கையாக செலுத்திய 44 ஆட்டு கிடாய்கள், 800 சேவல்களை பழிதீர்த்து கறி விருந்து சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு பரிமாறப்பட்டது.
இந்த விழாவில் மேலூர் தாலுகா பகுதியை சேர்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் மேலூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சிறப்பாக விழாவை நடத்தினார்கள்.