Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பருத்தியில் என்.பி.வி கரைசலின் பயன்பாடு…. கிருஷ்ணா வேளாண்மை கல்லூரி…. விவசாயி மகிழ்ச்சி….!!

மதுரையில் விவசாயிக்கு செயல்முறை விளக்கத்தை செய்து காண்பித்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கிருஷ்ணா வேளாண்மை கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கிராமப்புற தங்கும் திட்டத்தின் அடிப்படையில் கல்லூரிக்கு அருகிலிருக்கும் கிராமத்திற்கு சென்று செயல்முறை விளக்கத்தை விவசாயிகளுக்கு அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் கல்லூரி மாணவிகள் கண்ணூரிலிருக்கும் விவசாயிக்கு என்.பி.வி கரைசலின் பயன்பாட்டை குறித்து செயல்விளக்கம் அளித்தனர். அதாவது பருத்தி செடியில் என்.பி.வி கரைசல் எவ்வாறு அதிலிருக்கும் புழுக்களை கட்டுப்படுத்துகிறது என்றும், அதனை உபயோகம் செய்யும் முறையை குறித்தும் விவசாயிக்கு செயல் விளக்கத்தை செய்து காண்பித்தனர்.

Categories

Tech |