ஆர்.சி.எம்.எஸ். சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 18 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்க கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 533 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஆர்.சி.எச் ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு 9,989 ரூபாயில் இருந்து 10,779 ரூபாய்க்கும், டி.சி.எச் ரக பருத்தி 9,099 ரூபாயில் இருந்து 12,636 ரூபாய்க்கும், கொட்டு ரக பருத்தி 3,808 ரூபாயில் இருந்து 6,300 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஏலத்தில் மொத்தம் 18 லட்சம் வரை பருத்தி விற்பனை செய்யப்பட்டது. மேலும் கடந்த வாரத்தை விட பருத்தியின் விலை சற்று குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.