பருப்பு வகைகளை அதிகம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக பருப்பு வகைகள் மிகவும் முக்கியமானவை. அதனை சாப்பிடுவதால் உடலில் ஆற்றல் அதிகரிக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு பருப்பு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. இருந்தாலும் அதிக அளவில் பருப்பு வகைகளை சாப்பிடுவதால் சில குறைபாடுகள் ஏற்படுகின்றன.
அதன்படி அதிக அளவு பருப்பு வகைகளை சாப்பிட்டால் உங்கள் சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கும். அதனால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. அதுமட்டுமன்றி வாயு பிரச்சனை, வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். அதிக பருப்பு வகைகளை சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியே வராமல் போய்விடும். இது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
இருந்தாலும் பருப்பு வகைகளை சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டு. பயத்தம் பருப்பு மற்றும் மைசூர் பருப்பு கலந்து சாப்பிட்டால் உடல் நலன் மற்றும் வயிறு எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். இதனை நீங்கள் எந்த பருவத்தில் வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக மழைக்காலத்தில் இது வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும்.