Categories
மாநில செய்திகள்

பருவநிலை: தமிழ்நாடு 2022-23 வேளாண் பட்ஜெட்டில்…. திக்…திக்…..!!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் 29 மாவட்டங்கள் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், புவி வெப்பமடைவதால் நிலத்தடி நீர் குறையும் இடர் உள்ளது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் பட்ஜெட் தாக்கல் செய்தபோது வேளாண்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் காலநிலை மாற்றத்தை தாங்கி வளரும் பயிர்களை சாகுபடி செய்வது ஊக்குவிக்கப்படும் எனவும் அறிவித்தார்.

Categories

Tech |