Categories
உலக செய்திகள்

பருவநிலை மாறுபாடு தொடர்பாக… பைடன் 40 நாடுகளுக்கு அழைப்பு…!!

பருவநிலை மாறுபாடு தொடர்பாக விவாதிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 40 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பருவநிலை மாறுபாடு பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக விவாதிக்க பிரதமர் மோடி உள்ளிட்ட 40 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். உலக நாடுகள் அனைத்துக்கும் உள்ள மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று பருவநிலை மாறுபாடு. இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க 40 நாடுகளின் தலைவர்கள் ஏப்ரல் 22 மற்றும் 23ம் தேதிகளில் வீடியோ கான்பரன்சிங் முறையில் பங்கேற்கவுள்ளன.ர்

இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடியுடன் பல தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த மாநாட்டை பொதுமக்கள் பார்க்கும் வகையில் நேரடியாக ஒளிபரப்பவும் திட்டமிட்டுள்ளது.

Categories

Tech |