Categories
உலக செய்திகள்

பருவநிலை மாற்றம் எதிரொலி!…. பிரிட்டனில் வரலாறு காணாத வெப்ப அலை… வெளியான ஆய்வு முடிவுகள்….!!!!

மனிதா்கள் உருவாக்கிய பருவ நிலை மாற்றத்தால்தான் பிரிட்டனில் இம்மாதம் வரலாறு காணாத வெப்பஅலை வீசியதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

மேற்கு ஐரோப்பாவில் சென்ற 20-ஆம் தேதி வெப்ப அலையானது உச்சத்தைத் தொட்டபோது பிரிட்டனின் 34 பகுதிகளில் வரலாறுகாணாத வெப்பநிலை பதிவுசெய்யப்பட்டது. இதேபோன்ற பருவ நிலையில் தொழில்புரட்சிக்கு முந்தைய 19ம் நூற்றாண்டு காலத்தில் வெப்ப நிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் இப்போது பதிவுசெய்யப்பட்டுள்ள வெப்ப நிலையையும் ஒப்பிட்டு சா்வதேச நிபுணா் குழுவொன்று ஆய்வு மேற்கொண்டது.

அப்போது பசுமை வாயுக்கள் காற்றில் கலப்பதன் வாயிலாக மனிதா்களால் உருவாக்கப்படும் புவிவெப்பமாதல் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால்தான் பிரிட்டனில் இம்மாதம் வரலாறு காணாத வெப்ப அலை ஏற்பட்டது என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Categories

Tech |