வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு வேண்டிய முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த கூட்டத்திற்கு தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மை செயலாளருமான கார்த்திக் தலைமை தாங்கியுள்ளார். மாவட்ட ஆட்சியர் முரளிதரன் இந்த கூட்டத்தில் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, வன அலுவலர் வித்யா உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தியுள்ளனர்.