மின்விநியோகம் பாதிக்கப்படாமல் பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கிறது என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
வட கிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகள் தொடர்பாக மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். அதாவது, தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் அடிப்படையில் மின் விநியோகத்தில் எந்த பாதிப்புமின்றி சீராக வழங்க ஆய்வுக் கூட்டம் தற்போது நடைபெற்றுள்ளது. மழைக் காலத்தை எதிர்கொள்வதற்கு அதிகாரிகளுக்கு பல வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று தமிழகத்தில் மழைக்காலம் என்பதால் அவ்வப்போது மின் நிறுத்தம் செய்யப்படும் நிலையில் நேற்று முன்தினம் மட்டும் 143 இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து உடனடியாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின்சாரம் தற்போது தடையின்றி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். அத்துடன் பருவமழை காலத்தை எதிர்கொள்ள 1 லட்சத்து 40 ஆயிரம் மின் கம்பங்களும், 9000 கிமீ மின்கம்பிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் சீரான முறையில் மின் விநியோகம் செய்ய அனைத்து விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் தயாரிப்புக்கு தேவையான 10 -11 நாட்கள் வரையிலான நிலக்கரி கையிருப்பு இருக்கிறது.
சென்ற ஆட்சியில் நிலக்கரி காணாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், துறை ரீதியான அமைக்கப்பட்டிருந்த குழு அதன் அறிக்கையை தற்போது சமர்ப்பித்துள்ளது. அதில் எந்தெந்த காலகட்டத்தில் நிலகிரி காணாமல் போய் இருக்கிறது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக இந்த ஆய்வறிக்கை விஜிலன்ஸ் இடம் சமர்ப்பிக்க இருக்கிறோம் எனவும் கூறினார். இப்போதைய நிலையில் மத்திய அரசு நிறுவனங்களுக்கு தமிழகம் தொகையில் நிலுவைதொகை இல்லை. மின்வாரிய காலிப்ப ணியிடங்களில் குறிப்பிட்ட பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி வாயிலாகவும் மீதமுள்ள பணியிடங்கள் மின்வாரியத்தின் மூலமும் நேரடியாகவே நிரப்பப்படும் என்று கூறினார்.