தமிழகத்தில் பருவமழை மாற்றத்தின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்போது காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலோடு சேர்த்து சளி, இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகளும் இருக்கிறது. இது பருவமழை மாற்றத்தினால் ஏற்படும் சாதாரண காய்ச்சல் என்ற போதிலும் அதிக அளவில் காய்ச்சல் பரவுவதால் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஒரு முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.
அதாவது 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 240 இடங்கள் மற்றும் மாநகராட்சி பகுதியில் உள்ள 28 இடங்கள் என மொத்தம் 268 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதோடு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சலால் பாதிக்கப் படுபவர்களுக்காக 24 மணி நேர தனி வெளி நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்படும் பொதுமக்கள் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று கலெக்டர் கூறியுள்ளார்.