Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பருவம் எய்தியும் பூப்படைவில் தடையா? வலி என்ன? தீர்வு இங்கே!!

இந்த காலகட்டத்தில் 80 சதவீதம் பெண்கள் சிறு வயதிலேயே பூப்படைகிறார்கள், காரணம் உணவு முறைகளின் மற்றம் மட்டுமே . ஆனாலும் மீதியுள்ள 20 சதவீதம் பெண்கள் பருவம் எய்தியும் பூப்படையாமல் இருக்கிறார்கள். அதற்கு வலி என்னவென்பதை இதில் பாப்போம். 

சரியான பருவம் வந்த பின்னும் பூப்படையாத பெண்களுக்கு சிறிதளவு எள்ளுப்பூவை எடுத்து பனங்குருத்து சாறு விட்டு அரைத்து கொட்டைப் பாக்கு அளவு உருட்டி காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் சாப்பிடக் கொடுக்கலாம்.அவ்வாறு செய்தால் அவர்கள் விரைவில் பூப்படைவார்கள்.

செம்பருத்தி இலை அல்லது பூவை எந்த வகையிலாவது உட்கொள்ள அவர்கள் கூடிய விரைவில் பருவம் அடைவார்கள்.

நெருஞ்சி வேரை, எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து உட்கொண்டு வரபூப்படையாத பெண்கள் பூப்படைவார்கள்.

மாவிலிங்கப் பட்டையுடன் பூண்டு, மிளகு கூட்டி நன்கு அரைத்து பாக்கு அளவு எடுத்து மூன்று நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வர பருவம் எய்தியும், பூப்படையாத பெண்களுக்கு மாதவிடாய் உண்டாகும்.

கருஞ்சீரகம், சீரகம், ஓமம், பெருங்காயம், இந்துப்பு, சுக்கு, மிளகு, திப்பிலி இவை ஒவ்வொன்றையும் வகைக்கு 10 கிராம் வீதம் தனித்தனியாக பொடி செய்து வஸ்திர காயம் செய்து நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை சாப்பாட்டிற்கு ஒரு மணி நேரம் முன்பாக பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சூதக வாயு மாதவிடாயாகாமை, பிரசவ கோளாறுகள் தீரும்.

Categories

Tech |