சர்வதேச அளவில் பருவகால மாற்றத்தின் விளைவுகள் பற்றி பேசப்பட்டு வருகின்றது. உலக நாடுகளின் தலைவர்கள் இதற்கான முன் முயற்சிகளை எடுப்பதற்கான உறுதிமொழிகளை எடுத்து இருக்கின்றனர். இருப்பினும் இதற்கான நிதி ஆதாரத்திற்கு வழி வகுப்பதில் தீர்வு காணப்படாமல் இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகள் கரியமில வாயு பயன்பாட்டை குறைப்பதில் முழு அளவில் தன்னனை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் வளர்ச்சி அடைந்த நாடுகள் பல கூட்டங்களை நடத்தி பேசுவது மட்டுமல்லாமல் தங்களுடைய பணி முடிந்துவிட்டது என்ற போக்கிலேயே சென்று கொண்டிருக்கின்றனர். பருவகால மாற்ற விளைவுக்கு எடுத்துக்காட்டாக சமீபத்திய பாகிஸ்தான் வெள்ளம் நிபுணர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகள் சீனாவில் அதிகரித்த வெப்பநிலை, வெப்ப அலை பரவல், காட்டு தீ போன்றவற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பருவகால மாற்றத்தின் கொடூர விளைவை வெளிப்படுத்தி உள்ளது.
இந்த சூழலில் ஐநா ஆதரவு பெற்ற பிரசாரகர்கள் மேற்கொண்ட புதிய ஆய்வின் முடிவுகள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பருவகால வார நிகழ்வில் இன்று சமர்ப்பிக்கப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் அந்த அறிக்கையில் பருவகால மாற்றுத்துடன் தொடர்புடைய அரசின் புதிய கொள்கைகள் மற்றும் நுகர்வோர் அணுகுமுறை போன்றவற்றிற்கு ஏற்ப தங்களை தயார் படுத்திக் கொள்ளாவிட்டால் பண்ணை மற்றும் உணவுத்துறையில் முன்னணியில் இருக்கின்ற பெரிய நிறுவனங்களின் மதிப்பு வருகின்ற 2030 வருடத்திற்குள் சராசரியாக 7 சதவீதம் எனும் அளவில் குறையும். இதனால் மொத்தம் பதினோரு லட்சத்து 96 ஆயிரத்து 237 கோடி இழப்பை முதலீட்டாளர்கள் எதிர்கொள்கின்றார்கள் என அந்த அறிக்கை கூறுகின்றது.
இந்த நிலையில் அரசாங்கங்கள் கார்பன் வெளிப்பாட்டிற்கு விலை விதித்தால் அல்லது நுகர்வோர்கள் தங்களது இறைச்சி நுகர்வை குறைத்துவிட்டால் வேளாண் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை விலை உணவு துறை உள்ளிட்ட 40 பெரிய நிறுவனங்களும் தங்களுடைய கார்பன் வெளிப்பாடு அளவை குறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என அறிக்கை தெரிவிக்கின்றது. அதேசமயம் தாவரம் சார்ந்த இறைச்சி மற்றும் வனம் புத்துயிரூட்டல் போன்ற தொழில் சார்ந்த பகுதிகள் இதே நிறுவனங்களுக்கு பெரிய புதிய வாய்ப்பை வழங்கும் என அறிக்கை குறிப்பிடுகின்றது. இந்த ஆய்வின்படி கால்நடை பாமாயில் மற்றும் சோயா போன்ற பொருட்களுடன் தொடர்புடைய அத்யாவசிய பொருட்களை முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் நீக்க வேண்டும் என்ற முந்தின அழைப்புகளுக்கு முக்கியத்துவம் காட்டப்பட்டிருக்கிறது. ஏனென்றால் இந்த உற்பத்தி பொருட்கள் வன அளிப்பில் பெரும் பங்கு வகித்தது. இது தவிர இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் வனஅளிப்பு நிறுத்தம் மற்றும் அழிந்து போன வனங்களை பழைய நிலைக்கு கொண்டு வருதல் மற்றும் மதிழப்பிந்த நிலங்களை பொலிவு பெற செய்வது என்ற உறுதிமொழியை கடந்த வருடம் 100க்கும் மேற்பட்ட சர்வதேச தலைவர்கள் எடுத்துக் கொண்டனர் என்பது கவனிக்கத்தக்கதாகும்.