முகப் பருக்கள் வந்து போவதைக் காட்டிலும் அந்த பருக்களால் ஏற்படும் தடங்களும், தழும்புகளும் மறையாமல் இருப்பது மிகப்பெரிய கொடுமை. இது நம்முடைய அழகை கெடுப்பது மட்டுமல்லாமல் கண்ணாடியில் பார்க்கும் போதெல்லாம் அதை ஞாபகப்படுத்தும். இவற்றை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நம்மால் சரி செய்ய முடியும். ஆங்கிலத்தில் acne, pimple என்று சொல்லப்படும் இரண்டும் ஒன்றுதான் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தவறு. acne என்பது சருமத்தில் வரும் பரு. பிம்பிள் என்பது பரு வந்தால் சருமத்தில் ஏற்படும் விளைவு. குறிப்பாக ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை அதிக அளவில் இருக்கும்.இதை வீட்டில் உள்ள சில எளிய பொருட்களை வைத்து நம்மால் சரி செய்ய முடியும்.
ஆரஞ்சு தோல் பொடி: ஆரஞ்சு தோல் பொடியுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு குழைத்து பருக்கள் மற்றும் தழும்பு உள்ள இடங்களில் அப்ளை செய்து 20 நிமிடம் விட்டு பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் பருக்கள் வந்த இடத்தில் தழும்புகள் மறையும்.
தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெயில் அதிக அளவில் anti-inflammatory உள்ளது. இது பருக்களை விரட்டும் தன்மை கொண்டது. இரவு தூங்க செல்வதற்கு முன்பாக முகத்தை நன்கு கழுவி விட்டு தேங்காய் எண்ணெய் முகத்தில் நன்கு அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்து விட்டு இரவு முழுக்க அப்படியே விட்டு காலையில் எழுந்ததும் முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள பருக்கள் விரைவில் சென்றுவிடும்.
கடலை மாவு: கடலை மாவு சரும பிரச்சினைகளுக்கு தீர்வை தருகின்றது. கடலை மாவுடன் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை நன்கு கலந்து பேஸ்டாக முகத்தில் மற்றும் கழுத்து பகுதியில் அப்ளை செய்யவேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை வாரத்தில் மூன்று நாட்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கற்றாலை : இயற்கையாகவே சருமத்திற்கு பளபளப்பைத் தரக்கூடியது கற்றாலை. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் anti-inflammatory பண்புகள் அதிகளவில் உள்ளதால் சருமத்தில் ஏற்படும் வடுக்கள், பருக்கள் அதனால் ஏற்படும் தொற்றுக்களை சரிசெய்யும். இதனை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்னர் இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலையில் முகத்தை கழுவிக் கொள்ளலாம்.
லெமன் ஜூஸ்: லெமன் ஜூஸில் இயற்கையாகவே ப்ளீச்சிங் ஏஜண்ட் உள்ளது. இது சருமத்தைத் தூய்மை செய்கிறது. எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து, அதை நேரடியாக முகத்தில் பருக்கள் உள்ள இடங்களில் அப்ளை செய்து 15 – 20 வரை ஊறவிட்டு பின்னர் முகத்தை கழுவி வந்தால் சரும பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.