சில வாரங்களுக்கு முன்னதாக ருமேலி தார்(38) கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் இவர் பரோடா கிரிக்கெட் சங்கத்தின் மூத்த பெண்கள் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இதில் ருமேலி தார் கடந்த 2003 முதல் 2018 வரை இந்திய அணியின் ஆல்ரவுண்டராக இருந்தார். அவர் 4 வருட அனுபவத்துடன் பிசிசிஐ லெவல் 2 சான்றிதழ் பெற்ற பயிற்சியாளராக இருக்கிறார்.
2003 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச அரங்கில் அறிமுகமான இவர் 2018-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இறுதிஆட்டத்தில் ஆடினார். இதனிடையில் 2009 டி20 உலகக்கோப்பையில் இந்தியாவின் அதிக மான விக்கெட் வீழ்த்திய வீராங்கனையாக இருந்தார். இந்தியாவுக்காக 4 டெஸ்ட் போட்டிகள் உட்பட 100 சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடி இருக்கிறார். அதேபோன்று 78 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 961 ரன்களையும், 18 டி20 போட்டிகளில் விளையாடி 131 ரன்களையும் குவித்திருக்கிறார். 4 டெஸ்ட் போட்டிகளில் 29.5 சராசரியுடன் 236 ரன்களை அவர் எடுத்தது கவனிக்கத்தக்கது.