Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

பரோட்டா மாவு பிசையும் டான்ஸ்… அஜித்தின் பாடலை கிண்டலடித்த ப்ளூ சட்டை… கழுவி ஊத்தும் ரசிகர்கள்…!!!

அஜித்தின் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலை ப்ளூ சட்டை மாறன் கிண்டலடித்ததையடுத்து ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் பிப்ரவரி 24 இல் வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்தை வினோத் குமார் இயக்கியிருந்தார். மேலும் போனி கபூர் தயாரித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இத்திரைப்படம் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் வெளியான முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் 36 கோடி வசூலை செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுவரையில் வெளியான அஜித் திரைப்படங்களிலேயே வலிமை திரைப்படம் தான் அதிக வசூல் செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இப்படமானது இந்தியாவில் 76 கோடியும் வெளிநாடுகளில் 20 கோடியும் மொத்தமாக 96 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது.

இதன் வாயிலாக பிற முன்னணி நடிகர்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது என கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திரைப்பட இயக்குனர் மற்றும் திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு நடனம் ஆடியதை விமர்சித்துள்ளார். வலிமை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நாங்க வேற மாதிரி பாடலின் காட்சியை பதிவிட்டு இந்த மாவு பிசையும் டான்ஸை திரையரங்கில் சிரிக்காமல் பார்த்தவர்கள் எத்தனை பேர் என கேள்வி கேட்டிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்களும் அவரை கண்டபடி திட்டி வருகின்றனர். உங்களுடைய ஆன்ட்டி இந்தியன் திரைப்படத்தை சிரித்துப் பார்க்க ஆளே இல்லையே.. என திட்டி வருகின்றனர். மேலும் ப்ளூ சட்டை மாறனின் புகைப்படத்தை எடிட் செய்து கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பதிவிட்டு திட்டி வருகின்றனர். இணையதளவாசிகளும் திட்டி வருகின்றனர்.

Categories

Tech |