Categories
மாநில செய்திகள்

“பரோலில் செல்ல அனுமதி”… நளினி தாக்கல் செய்த மனு…. சிறைத்துறைக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!!!!!!!

நளினி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் சிறை துறைக்கு  முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் முருகனுக்கு மருத்துவ காரணங்களுக்காக ஆறு நாட்கள் பரோல் வழங்க கோரிய மனுவிற்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தாக்கல் செய்திருந்த மனுவில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு தமிழக அரசு பரோல்  வழங்கியதால் தாய் பத்மாவுடன் தங்கி இருப்பதாகவும், ஆனால் வேலூர் சிறையில் இருக்கும் கணவர் முருகனுக்கு பரோல்  வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 33 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் தங்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசின் விடுதலை தீர்மானத்தின்படி இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டு இருக்கின்றார். இந்தநிலையில்  மருத்துவ காரணங்களுக்காக கணவர் முருகனை ஆறு நாட்களில் பரோலில் செல்ல அனுமதிக்க கோரி மே 26-ஆம் தேதி தானும் மே 21 ம் தேதி தனது தாய் பத்மாவும் தமிழக அரசிடம் மனு அளித்துள்ளதாகவும் ஆனால் அவை  இதுவரை பரிசீலிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவர் முருகனை ஆறு நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த மனு  எம்எஸ் ரமேஷ் முகமது சபீக்  அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் மனு தொடர்பாக ஜூன் 13-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக சிறைத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

Categories

Tech |