தப்பி ஓடிய இரட்டை ஆயுள் தண்டனை கைதியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிராங்குடி பகுதியில் சுரேஷ்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது திருட்டு, கொலை வழக்குகள் இருக்கின்றன. இந்நிலையில் ஒரு வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற சுரேஷ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீஸ் காவலில் பரோலில் சுரேஷ் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அதிகாலை நேரத்தில் தப்பி ஓடிய சுரேஷை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் விழுப்புரத்தில் பதுங்கி இருந்த சுரேஷை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.