Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“பர்கூர் பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் கடைகள்”…. உரிய இடத்திற்கு மாற்றப்படுமா…? பொதுமக்கள் எதிர்பார்ப்பு….!!!!!

பர்கூர் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து அமைக்கப்படும் கடைகள், அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மாற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்திருக்கின்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூரில் இருந்து போச்சம்பள்ளி, மத்தூர், காளி கோவில், வடமலைகுண்டா, பச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு டவுன் பேருந்துகள் இயக்கப்படுகின்றது. பர்கூரிலிருந்து அரசு கல்லூரி, பொறியியல் கல்லூரி, அரசு நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், தனியார் பள்ளிகளில் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். மேலும் வட்டார அலுவலகம், தாலுகா அலுவலகம், கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் வந்து சொல்கின்றார்கள்.

பர்கூர் பேருந்து நிலையத்தில் வார சந்தை செவ்வாய்க்கிழமை நடைபெறுவதால் பேருந்து நிறுத்த முடியாத அளவிற்கு கடைகளை அமைத்து விடுகின்றார்கள். இதனால் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு வராமல் சாலையோரங்களிலே நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் நிலை இருக்கின்றது. நான்கு பேருந்துகளை கூட அங்கே நிறுத்த முடியவில்லை. இதனால் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர், பொதுமக்கள் உள்ளிட்டோர் சிரமப்பட்டு வருகின்றார்கள்.

சாலையில் இருபுறமும் கடையை அமைத்து விடுவதால் மக்களுக்கு இடையூறாக இருக்கின்றது. சிலர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைத்துவிடுகின்றார்கள். ஆகையால் பேருந்து நிலையத்தில் இருபுறங்களிலும் இருக்கும் கடைகளை சந்தைப்பேட்டையில் அதற்கு உரிய இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேருந்து நிலையத்தில் பல கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Categories

Tech |