Categories
உலக செய்திகள்

பர்தா அணிந்த பெண் இஸ்ரேல் வீரர்களை நோக்கி தாக்குதல்.. அதன் பின் நேர்ந்த பயங்கரம்..!!

பாலஸ்தீனத்தை சேர்ந்த பெண் ஒருவர் பர்தா அணிந்துகொண்டு துப்பாக்கியுடன் இஸ்ரேல் வீரர்களை நெருங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. 

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் கடும் மோதல் வெடித்து வருகிறது. இதில் அப்பாவி மக்களும் உயிரிழக்கின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் வீரர்கள் எல்லையில் முகாமிட்டிருந்த போது பாலஸ்தீனத்திலிருந்து பர்தா அணிந்து கொண்டு ஒரு பெண் அவர்களை நெருங்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது.

அதாவது இஸ்ரேல் வீரர்கள் Hebron ற்கு வெளியில் Elias Junction என்ற பகுதியில் முகாமிட்டிருந்த போது அவர்களை நோக்கி பர்தா அணிந்து கொண்டு இயந்திரத் துப்பாக்கியுடன் ஒரு பெண் செல்கிறார். சிசிடிவி கேமராவில் பதிவான அந்த காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து வீரர்களை நோக்கி அந்த பெண் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதில் வீரர்கள் எவருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் அந்தப்பெண் பலியாகியுள்ளார்.

Categories

Tech |