பிறந்தநாள் விழாவின் பொழுது எய்ம்ஸ் பெண் பயிற்சி மருத்துவரை சீனியர் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவமானது கடந்த செப்டம்பரில் மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே பிறந்தநாள் விழாவின்போது நடந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் குற்றம் சாட்டப்பட்ட நபர் தலைமறைவாகியுள்ளார். அக்டோபர் 11-ஆம் தேதி ஹவுஸ் காஸ் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். மருத்துவமனைக்கு சென்ற காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவரின் மருத்துவ அறிக்கைகள் சரிபார்க்கப்பட்டது. செப்டம்பர் 26 அன்று மற்றொருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற பொழுது மூத்த மருத்துவரான ஒருவர் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனடிப்படையில் குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ள மருத்துவரை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வருகை தந்த மருத்துவர்களிடமும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.