Categories
தேசிய செய்திகள்

பறக்கும் ட்ரோன்கள்…. வெறும் 9 நிமிடத்தில் தடுப்பூசி வினியோகம்…. அமோக வெற்றி….!!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் தொலைதூர கிராமங்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை கொண்டு செல்லும் பணிக்கு பறக்கும் ட்ரோன்களில் பயன்படுத்தும் சோதனை நடைபெற்று வருகிறது. ஜவஹர் பகுதியில் இருந்து ஜாப் என்ற கிராமத்திற்கு தடுப்பூசிகளை கொண்டு செல்லும் முதல் முயற்சி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

இதுபற்றி அந்த மாவட்டத்தின் ஆட்சியர் மணிக் குர்ஷல் பேசியதாவது, பால்கர் மாவட்டத்தில் வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத சாலைகளை கொண்ட கிராமங்கள் ஏராளமாக இருக்கிறது. அவற்றில் ஒன்றான ஜாப் கிராமத்திற்கு ஜவஹர் என்ற இடத்தில் இருந்து பறக்கும் ட்ரோன்கள் மூலம் சோதனை முயற்சியாக 300 தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட்டன. 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த கிராமத்திற்கு, வாகனங்கள் மூலம் சென்றால் 40 நிமிடங்கள் ஆகும்.

ஆனால் ட்ரோன்களின் மூலம் வெறும் 9 நிமிடங்களில் தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட்டு உள்ளூர் சுகாதார நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். மேலும் அந்த மாவட்டத்தின் மருத்துவ அதிகாரியான மருத்துவர் தயானந்த் சூரியவான்ஷி கூறியபோது, இந்த திட்டத்தின் மூலம் தடுப்பூசி மையங்களுக்குச் செல்லமுடியாத ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் கொரோனா தடுப்பூசியை கொண்டு செல்ல முடியும். மக்களுக்கு தடுப்பூசி மீதி இருக்கும் தவறான எண்ணத்தையும் இதன்மூலமாக மாற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |