Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வசமா சிக்கிட்டாங்க… எங்கிருந்து வந்தது இவ்ளோ பணம் … பறக்கும் படையிடம் சிக்கிய வங்கி ஊழியர்கள்…!!

புதுக்கோட்டையில் உரிய ஆவணம் இல்லாமல்எடுத்து  செல்லப்பட்ட பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் மடக்கி பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் பகுதியில் நேற்று பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.அப்போது நடத்திய சோதனையில் கட்டுக் கட்டாக பணம் இருந்ததை கண்டறிந்த அதிகாரிகள் அந்த காரை மடக்கி பிடித்தனர். இதனையடுத்து காரில் வந்தவர்களிடம் விசாரணை செய்தபோது சிட்டி யூனியன் வங்கியிலிருந்து காரையூர் வங்கிக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளனர். ஆனால் அதற்கான உரிய ஆவணம் ஏதுமில்லை என்பதால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து தேர்தல் அதிகாரி சம்பந்தப்பட்ட வங்கி பொறுப்பாளருக்கு  தகவல் தெரிவித்து வரவழைத்தார். மேலும் அவர்களிடம் உரிய ஆவணம் கொண்டு வந்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளும்படி கூறியுள்ளார்.

Categories

Tech |