ஊழியர் ஒருவர் பறக்கும் விமானத்தில் பயணிகளிடம் உல்லாசமாக இருந்துள்ள தகவல் அந்நிறுவனத்தையே உலுக்கியுள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் விமானம் பறந்து கொண்டிருந்தபோது பயணிகளுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தற்போது அந்த ஊழியர் யார் என்பதை அந்நிறுவனம் தேடிக்கொண்டிருக்கிறது. மேலும் இதுகுறித்த ஊழியரை உடனடியாக பணி நீக்கம் செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூகவலைதளத்தில் குறிப்பிட்ட ஒரு பெயரில் அடையாளம் காணப்படும் அந்த ஊழியர் பயணிகளிடம் பறக்கும் விமானத்தில் உடல் ரீதியான தேவைகள் பூர்த்தி செய்து தரப்படும் என விளம்பரம் செய்து வந்துள்ளார்.
மேலும் அந்த ஊழியர் பயணிகளின் தேவையை அறிந்து அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விமான நிலையத்திற்கு வெளியே உடல் ரீதியான சேவை தேவை எனில் 50 பவுண்டுகள் முன்பணமாக செலுத்த வேண்டும் என்று அவரது சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தன்னுடைய பாதுகாப்பு கருதி, சேவை தேவைப்படும் நபர் நபர் விமான ஊழியர்கள் தங்கும் ஹோட்டலில் அறை முன்பதிவு செய்ய வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சிக்கிய பெண்ணை நிர்வாகத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஏர்வேஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “எல்லா நேரங்களிலும் எங்கள் சக ஊழியர்களில் ஒருவர் நடத்தையில் உயர்ந்த தரத்தை மட்டுமே நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும் சர்ச்சைக்குரிய அந்த ஊழியர் கண்டுபிடிக்கப்பட்ட உடனே பணிநீக்கம் செய்யப்படுவார்” என்று கூறியுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான ஊழியரின் சமூக ஊடக பக்கம் மொத்தமாக நீக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.