தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் நல விடுதியில் உள்ள சமையல்காரர்கள் தன்னுடைய வீட்டு வேலைக்காரர்களாக கயல்விழி ஏன் பணியமர்த்த வேண்டும்? என்று கேள்வி எழுப்பி இருக்கும் அண்ணாமலை, காற்றில் பறந்தது சமூகநீதி.! மக்கள் வரிப்பணத்தில் அநீதி.! என்று விமர்சனம் செய்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கயல்விழி, ஆதிதிராவிடர் நல விடுதியில் உள்ள சமையல்காரர்கள் என்னுடைய வீட்டு வேலைக்காரர்களாக பணியமர்த்தியுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டுகிறார். எங்கள் வீட்டு சமையலுக்கு நான் எங்கள் துறை விடுதியில் உள்ள சமையலர்களை பயன்படுத்தியதாக அண்ணாமலை அபாண்டமாக பொய் சொல்லியுள்ளார். எங்கள் வீட்டு சமையலுக்கு இரண்டு சமையலர்களை சம்பளத்துக்கு பணியமர்த்தியுள்ளேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.