Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பறவைகள் வேட்டையா….? வலை விரித்த இரண்டு பேர்…. அதிரடி நடவடிக்கையில் வனத்துறையினர்….!!!!

பறவைகளை வேட்டையாடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி வனசரகத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் வயல்வெளிகளிலும் கொக்கு, மடையான் உள்ளிட்ட பறவைகள் வேட்டையாடப்படுவதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டிருந்தது இந்த புகாரின் பேரில் திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் வனத்துறை அதிகாரிகள் சீர்காழியில் உள்ள வயல்வெளிகள் மற்றும் வனப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் இரண்டு பேர் ஆக்கூர், புங்கையன் தோப்பு, மாத்தூர் வயல்வெளிகளில் வலை வைத்து மடையான் பறவைகளை வேட்டையாடியதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இவர்களை வனத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் புங்கையன் தோப்பு பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் மற்றும் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரையும் வனத்துறையினர் கைது செய்து தல ரூபாய் 20000 அபராதமும் விதித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் அவர்களிடம் இருந்த வலைகள் மற்றும் பறவைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |