பறவை காய்ச்சல் எதிரொலியாக தென் கொரியாவில் 3.95 லட்சம் உயிர்களை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் பறவை காய்ச்சல் ஏற்பட்டது. எச்5என்8 புளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த 2018 ஆம் தேதி முதல் பறவைக்காய்ச்சல் ஆக இது அறியப்பட்டது. இந்த சூழலில் தென் கொரியா நாட்டின் தென் மேற்கே அமைந்த ஜோன் புக் மாகாணத்தில் வாத்து பண்ணை ஒன்றில் இந்த ஆண்டில் முதன்முறையாக எச்5என்8 புளூ வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டதாக அந்த நாட்டின் உணவு, விவசாயம் மற்றும் மீன் வள அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து காய்ச்சல் மற்ற பறவைகளுக்கு பரவாமல் இருக்க அந்த பண்ணையில் இருந்த 19 ஆயிரம் வாத்துக்களும் அளிக்கப்பட்டன. இந்த பண்ணையை சுற்றி மூன்று கிலோமீட்டர் தொலைவில் ஆறு கோழிப்பண்ணைகள் உள்ளன. 48 மணி நேரத்திற்கு நாடு முழுவதும் பண்ணை பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஜியேன்ஜ்அப் அப்பகுதியில் ஏழுநாட்களுக்கு பண்ணைகளுக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியை சுற்றி 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த பண்ணைகளுக்கு 30 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் தீவிர பாதிப்பு என உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாகாண அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பறவை காய்ச்சல் கண்டறிய வாத்து, பண்ணையை சுற்றி மூன்று கிலோமீட்டர் தொலைவுள்ள 3.90 லட்சம் கோழி குஞ்சுகள் மற்றும் வாக்குகளை அளிக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.