கேரளாவில் பரவி கொண்டிருக்கும் பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து கேரளாவின் ஆலப்புழா பகுதியிலிருந்து பறவை காய்ச்சல் பரவி வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் இருந்து கோழி, வாத்து, முட்டை மற்றும் இறைச்சி உள்ளிட்டவை தமிழகம் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தீவனங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமன்றி கேரள மற்றும் தமிழகம் எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் நடந்து கொண்டிருக்கிறது.
இது இன்ஃப்ளூயன்சா என்ற வைரஸ் மூலமாக பறவைகளுக்கு இந்த காய்ச்சல் பரவுகிறது. பறவைகளின் தொண்டை மற்றும் தாடை கருத்து காணப்படுவது, சிறகுகள் சிலிர்ந்து, தோல் பகுதியில் ரத்தப் புள்ளிகள் காணப்படுவது இந்த நோயின் அறிகுறிகளாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பறவைகளின் எச்சங்கள் மூலமாக மற்ற பறவைகளுக்கும் பரவும் இந்த நோய் மனிதர்களை பாதிக்கும் அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.