Categories
உலக செய்திகள்

“பறவை காய்ச்சல் எதிரொலி” இந்த 4 நாட்ல இருந்து பொருட்கள் வேண்டாம்… தடை விதித்த அமீரகம்…!!

சில நாடுகளில் பறவைக்காய்ச்சல் பரவி வருவதால் பறவை தொடர்பான பொருட்களை இறக்குமதி செய்ய அமீரகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பறவை காய்ச்சலின் எதிரொலியாக அமீரகத்துக்கு, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து போன்ற  நாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமீரக பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, “அமீரகத்தில் உள்ள பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்தியா, ஓமன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகளும், பலவிதமான பொருட்களும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் தற்போது ஒரு சில நாடுகளில் பறவைக் காய்ச்சல் நோய் பரவி வருவதால் நெதர்லாந்து, ஜெர்மனி நாடுகளில் இருந்தும், ரஷ்யா மற்றும் இங்கிலாந்து போன்ற நாட்டின் சில பகுதிகளில் இருந்தும் பறவைகள் தொடர்பான எந்த பொருட்களையும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நலன் கருதி விதிக்கப்பட்டுள்ள இந்த தடையின் காரணமாக பறவைகளின்  முட்டைகள், பறவைகள் மற்றும் பறவைகளின் குஞ்சுகள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விலங்குகள் விற்பனை செய்யப்படும் மார்க்கெட்டுகளில் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருவதால், பறவைகள் சுகாதாரத்துடன் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

நெதர்லாந்து ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்தும் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாட்டின் சில பகுதிகளில் இருந்தும் பறவைகள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப் படாத வகையில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக துறைமுக பகுதியில் சிறப்புக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |