Categories
மாநில செய்திகள்

பறவை காய்ச்சல் எதிரொலி… சரியும் கறிக்கோழி விலை…!!!

கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் காரணமாக கோழி மற்றும் முட்டை உள்ளிட்ட இறைச்சிகள் விற்பனை மிகவும் குறைந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து கேரளாவின் ஆலப்புழா பகுதியிலிருந்து பறவை காய்ச்சல் பரவி வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் இருந்து கோழி, வாத்து, முட்டை மற்றும் இறைச்சி உள்ளிட்டவை தமிழகம் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தீவனங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமன்றி கேரள மற்றும் தமிழகம் எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் என்று சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து பறவைக்காய்ச்சல் தாக்கத்தால் நாமக்கல் பண்ணைகளில் முட்டை விலை 25 காசு குறைந்து ரூ.4.85 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு முட்டை விலை 20 காசுகள் குறைந்து, ரூ.5.10- க்கு விற்பனை செய்யப்படுகிறது. பறவைக்காய்ச்சல் அச்சம் தொடரும் நிலையில் முட்டை விலை கடும் சரிவை சந்திக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் நாமக்கல் பண்ணைகளில் ஒரு கிலோ கறிக்கோழி விலை 14 ரூபாய் குறைந்து 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பறவை காய்ச்சல் எதிரொலி காரணமாக கோழி மற்றும் முட்டை உள்ளிட்ட இறைச்சிகள் விற்பனை குறைந்துள்ளது.

Categories

Tech |