கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பல்வேறு கோழி மற்றும் வாத்து பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அங்குள்ள வாத்துப்பண்ணை ஒன்றில் 13,000-க்கும் அதிகமான வாழ்த்துக்கள் சமீபத்தில் பறவை காய்ச்சலால் இறந்து போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்பின்னர், ஆலப்புழாவில் தொடர்ந்து பறவைக்காய்ச்சல் உயர்ந்து கொண்டே வருவதால், பண்ணைகளில் உள்ள 20,000 வாழ்த்துக்களையும் 35,000 கோழிகளையும் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பறவைகளின் இறைச்சி, முட்டைகள் விற்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.