சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது உரிய ஆவனம் இல்லாமல் கடத்தி செல்லப்பட்ட 1 லட்சத்து 72 ஆயிரம் பணத்தை பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பறக்கும் படை குழுவினர் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் ஒன்றியம் பகுதியிலிருக்கும் மும்முடி வீரகனுர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பெரியசாமி தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த வேனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த வேனில் 1 லட்சத்து 72 ஆயிரம் பணம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து வேன் டிரைவரிடம் விசாரணை நடத்திய அவர் போது விஜயன் என்பதும், அந்த வேன் தனியார் உணவுப் பொருள் நிறுவனத்துக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது.மேலும் உரிய ஆவண இல்லாமல் வேனில் பணத்தை கொண்டு சென்றதால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து கெங்கவல்லி தொகுதியிலுள்ள தேர்தல் அதிகாரி அமுதனிடம் ஒப்படைத்துள்ளனர்.