தற்போது பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது பற்களில் உள்ள கறையை எப்படி போக்குவது என்பது தான். அது மிகவும் சுலபம். இதனைத் தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் போதும் பற்களில் கறைகள் அறவே நீங்கிவிடும். கொய்யாப்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி பழம் உண்பதால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை கொப்பளித்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கிவிடும். இரவு தூங்குவதற்கு முன்பு ஆரஞ்சுப்பழ மேல் தோலை பற்களில் தேய்த்து விட்டு படுத்து மறுநாள் காலை எழுந்தவுடன் நீர் விட்டுக் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது பற்களின் மேலும் பற்களின் உட்புறத்திலும் உள்ள கறைகள் நீங்கிவிடும்.
Categories