திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயால் வனவிலங்குகள் பதறி ஓடியது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை அருகே பிளாத்திகுளம் என்ற வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் நேற்று முன்தினம் எதிர்பாராதவிதமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதில் அங்கிருந்த கொடி, செடி, மரங்கள் கட்டுக்கடங்காத வகையில் பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் பேரில் தீத்தடுப்பு பணியாளர்கள் மற்றும் வன காப்பாளர் பீட்டர் ஆகியோர் வத்தலகுண்டு வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயால் ஏராளமான மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளது. மேலும் நெருப்பின் தாக்கத்தை தாங்க முடியாத காட்டுப்பன்றி, காட்டெருமை, மான்கள் ஆகிய வன விலங்குகள் அங்கிருந்து பதறி ஓடியது.