Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பற்றி எரிந்த தீ…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சரக்கு ஆடோவிற்கு தீ வைத்துவிட்டு சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குலப்பெண்பட்டி கிராமத்தில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் தேவேந்திரன் தனது சரக்கு ஆட்டோவை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு தூங்குவதற்காக சென்றுவிட்டார். அப்போது நள்ளிரவில் தேவேந்திரனின் சரக்கு ஆட்டோவுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு சென்றனர்.

இதனைபார்த்த அப்பகுதி மக்கள் தேவேந்திரனுக்கு தகவலளித்துள்ளனர். ஆனால் அவர் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்ப்பதற்குள் சரக்கு ஆட்டோ முழுவதும் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து தேவேந்திரன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிந்த காவல்துறையினர் சரக்கு ஆட்டோவிற்கு தீ வைத்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |