Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்” அதிஷ்டவசமாக உயிர் தப்பிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 மோட்டார் சைக்கிள்  திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செந்தில் நகர் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொம்மசந்திரா  பகுதியில் அமைத்துள்ள  ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சதீஷ் தினமும் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம். அதைப்போல் நேற்றும் சதீஷ் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு  சென்று  கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சதீஸ் உடனடியாக மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்துள்ளார்.

இதனையடுத்து  பொது மக்கள் நீண்ட நேரம் போராடி மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீயை அனைத்துள்ளனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |