திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மரக்கடை எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆர்.கே மடம் பகுதியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மரக்கடையில் இருந்து திடீரென புகைமூட்டம் வந்துள்ளது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனே அங்கிருந்து வெளியே ஓடிவிட்டனர். அதன்பிறகு மரக்கடை மளமளவென தீ பிடித்து எரிந்துள்ளது.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்துள்ளனர். இந்த விபத்தில் கடையில் இருந்த ஏராளமான மரங்கள் தீயில் கருகி நாசமானது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மயிலாப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.