மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டதனால் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் ஓரியண்டல் பகுதியில் இரண்டு மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த இரண்டு மாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில்அமைந்துள்ள மளிகை கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது பக்கத்தில் உள்ள கட்டிடங்களுக்கும் அதிவேகமாகப் பரவியது. இதனால் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 30-க்கும் மேலானோர் காயமடைந்துள்ளனர். இந்த தீ விபத்திற்கான காரணம் பற்றி இன்னும் தெரியவில்லை. ஆனால் கடையில் உள்ள எரிவாயு சிலிண்டர் வெடித்து இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.