Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பலத்த கனமழை… வீடுகளில் புகுந்த மழைநீர்…. காட்டாற்று வெள்ளத்தால் மூழ்கிய 2 தரைப்பாலம்…!!!

ஈரோட்டில் பெய்த கனமழையால் வீடுகளில் வெள்ளம் உள்ளே புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் ஈரோடு மாவட்டம் தாளவாடி, சிக்கள்ளி, தொட்டகாஞ்சனூர், இக்களூர், நெய்தாளபுரம், பாலப்படுக்கை மற்றும் வனப் பகுதியில் பலத்த கனமழை பெய்தது. இந்த கனமழையால் ஒடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாளவாடியிலிருந்து தலமலை செல்லும் ரோட்டில் சிக்கள்ளி அருகில் தரை பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கி அடித்து சென்றது. இதனால் நேற்று இரவு 8 மணி முதல் போக்குவரத்து பாதித்தது.

அதேபோன்று  தாளவாடி ஆசனூர் செல்லும் ரோட்டில் கும்டாபுரம் அருகில் உள்ள தரை பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தது. இதனால் அந்த பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கிராமத்துக்குள் செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்பட்டனர். காட்டாற்று வெள்ள நீர் வடியும் வரை கரையில் மக்கள் காத்திருந்து அதன் பின் வெள்ளம் வடிந்த பிறகு கிராமத்திற்குள் சென்றார்கள்.

இதே போன்று நெருஞ்சிப்பேட்டை, ஊமாரெட்டியூர், குருவரெட்டியூர், அம்மாபேட்டை, சின்னப்பள்ளம் உட்பட பல பகுதிகளில் நேற்று மாலை 4 மணி முதல் சுமார் இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் ஊமாரெட்டியூர், பந்தல்கரடு ஆகிய பகுதிகளில் உள்ள நான்கு வீடுகளில் வெள்ளம் உள்ளே புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இதனை அடுத்து பொதுமக்கள் மழை நீரை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

Categories

Tech |