Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன்…. விருதாச்சலத்தில் பிரபல மருத்துவமனை கட்டிடம் இடிப்பு…. அதிரடி நடவடிக்கை….!!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள 4 1/2 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் முல்லா ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், 66 கடைகள் மற்றும் அலடி ரோட்டில் இருக்கும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 95 கடைகள் மற்றும் வீடுகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி விருதாச்சலம் தாசில்தார் தனபதி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் விருதாச்சலம் பேருந்து நிலையம் சுற்றுச்சுவரை ஒட்டி இருக்கும் பிரபல மருத்துவமனையை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு விருதாச்சலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின், விருத்தாச்சலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |