கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி எம்.ஜி.ஆர் நகரில் மாற்றுத்திறனாளியான நாகம்மாள் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நாகம்மாளின் கணவர் இறந்து விட்டதால் நாகம்மாள் தனது பேத்தியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அந்த பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால் நாகம்மாளின் வீட்டு சமையலறை சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது. இதனால் பாட்டியும், பேத்தியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த அதிகாரிகள் இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டு அரசின் நிவாரண நிதியாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.