சிவகங்கையில் உள்ள பல கோவில்களில் நேற்று முன்தினம் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டியில் பழமையான கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அலங்கார பூஜைகளும், 16 வகையான சிறப்பு அபிஷேகங்களும், கைலாசநாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு நடைபெற்றது. இதேபோன்று பிரதோஷ வழிபாடு உலக நாயகி சமேத ராமநாதசாமி கோவிலிலும் சிறப்பாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து ரிஷபவாகனத்தில் உள் மண்டபத்தில் உலக நாயகி சமேத உலகநாத சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேலும் பிரதோஷ வழிபாடு காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவிலிலும் செம்மையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அலங்கார பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நந்தி பெருமானுக்கு செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.